தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி நோட் 10 விலை விவரங்கள்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் நான்கு மாடல்களில் வெளியாகும் என்றும் இது எல்.டி.இ. மற்றும் 5ஜி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தற்சமயம் ரஷ்யாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை 1100 முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,450 முதல் ரூ.83,250) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த விலை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் 5ஜி மாடல் அல்லது ஸ்டான்டர்டு எல்.டி.இ. மாடலின் விலையா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
மற்று மாடல்களுடன் கேலக்ஸி நோட் 10இ வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வேரியண்ட் அறிமுகமாகும் பட்சத்தில் இதன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக சில அம்சங்கள் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு, யு.எஸ்.பி. டைப்-சி சார்ந்து இயங்கும் இயர்போன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் யு.எஸ்.பி. டைப்-சி - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் டாங்கில் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பட்டன்கள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்ட கேமரா யூனிட் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் முன்புற பன்ச் ஹோல் கேமரா சிறியதாக்கப்பட்டு ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இவற்றுடன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.