தொழில்நுட்பம்

மூன்று பிரைமரி கேமரா கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-06-01 05:39 GMT   |   Update On 2019-06-01 05:39 GMT
மெய்சு நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது 16Xs ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



மெய்சு நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது 16Xs மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெய்சு 16Xs ஸ்மார்ட்போன் ஃபிளைம் ஓ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு பை மற்றும் ஒன் மைண்ட் 3.0 ஏ.ஐ. இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 8 எம்.பி. 118.8° அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மெய்சு 16Xs ஸ்மார்ட்போனின் பின்புறம் பிலெக்சிகிளாஸ் பேக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் எம்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



மெய்சு 16Xs சிறப்பம்சங்கள்

- 6.2 இன்ச் 1080x2232 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18.6:9 சூப்பர் AMOLED ஆன்-செல் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். 7
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 0.8um பிக்சல்
- 8 எம்.பி. 118.8° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
- 5 எம்.பி. கேமரா, f/1.9
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய மெய்சு 16Xs ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளு, கோரல் ஆரஞ்சு மற்றும் சில்க் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,150) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,180) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News