தொழில்நுட்பம்

2019 ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்

Published On 2019-05-24 05:30 GMT   |   Update On 2019-05-24 05:30 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது.

முந்தைய ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு கீநோட் உரையும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் WWDC செயலிகளில் நேரலை செய்யப்படுகிறது. 2019 டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் மென்பொருள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 6 உள்ளிட்ட இயங்குதளங்கள் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஓ.எஸ். 13 இயங்குதளம் யுகான் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.



அந்த வகையில் ஐ.ஓ.எஸ். 13 இல் டார்க் மோட், யு.ஐ. ட்வீக்கள், புதிய அனிமேஷன்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கீபோர்டில் ஸ்வைப் டைப்பிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக் ஓ.எஸ். 10.15 தளத்தில் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதியும் பாட்கேஸ்ட் போன்ற ஐபேட் செயலிகளுக்கு மேக் ஓ.எஸ். வெர்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் மேக் சாதனங்களுக்கென ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் மியூசிக் செயலியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது ஐடியூன்ஸ் போன்றே செயல்படும் என தெரிகிறது. இத்துடன் மேம்பட்ட மேக் ப்ரோ சார்ந்த அறிவிப்பும் இந்நிகழ்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ச் ஓ.எஸ். 6 தளத்தில் ஆப் ஸ்டோர் வசதி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் மெமோஸ் செயலி, அனிமோஜிக்கள், மெமோஜி வசதி, ஆப்பிள் புக்ஸ் செயலி மற்றும் உடல்நலம் சார்ந்த புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News