தொழில்நுட்பம்

இனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி

Published On 2019-05-03 06:02 GMT   |   Update On 2019-05-03 06:02 GMT
பாரதி ஏர்டெல் நிறவனம் இனி எல்லோருக்கும் அது கிடைக்கும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #Airtel



ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் பிரைம் சந்தாவை விரைவில் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா ஏர்டெலின் #AirtelThanks திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஏர்டெல் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பதால் அமேசான் பிரைம் சந்தாவுக்கான வேலிடிட்டியும் 28 நாட்கள் தான். முன்னதாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பிரைம் சந்தா வழங்கப்பட்டது.



ஏர்டெல் திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தா பெறுவது எப்படி?

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி, ஏர்டெல் இந்தியா, அமேசான் இந்தியா, அமேசான் பிரைம் அல்லது ஏர்டெல் ரீடெயில் ஸ்டோர் சென்று புதிய ரூ.299 சலுகையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் அமேசான் பிரைம் சந்தா ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

அமேசான் பிரைம் சந்தாவிற்கு பயனர்கள் 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். சைன்-இன் செய்ததும் சலுகை வேலிடிட்டி தீரும் வரை அமேசான் பிரைம் சேவையை பயன்படுத்த துவங்கலாம். அந்த வகையில் சலுகையின் வேலிடிட்டி தீர்ந்ததும் அமேசான் பிரைம் சேவையை பயன்படுத்த முடியாது.

ரூ.299 சலுகைக்கு ரீசார்ஜ் செய்ததும் ஏர்டெல் தேங்ஸ் செயலியை டவுன்லோடு செய்யக் கோரும் குறுந்தகவல் கிடைக்கும். செயலியை டவுன்லோடு செய்ததும் ஆக்டிவேட் பிரைம் எனும் பட்டனை க்ளிக் செய்து அமேசான் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்யலாம்.
Tags:    

Similar News