தொழில்நுட்பம்

நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

Published On 2019-03-06 05:48 GMT   |   Update On 2019-03-06 05:48 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. #Nokia2 #Smartphone



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 2017 ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்குவதற்கென ஹெச்.எம்.டி. குளோபல் கூகுள் மற்றும் குவால்காம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. புதிய இயங்குதளம் ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க மேனுவல் முறையில் அப்டேட் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. 



நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் செய்வது எப்படி?

நோக்கியா 2 ஆண்ட்ராய்டு அப்டேட் பக்கத்திற்கு செல்லவும்.
நோக்கியா அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும்.
சாதனத்தை IMEI குறியீடு கொண்டு வேலிடேட் செய்ய வேண்டும்.
நெட்வொர்க் ஆப்பரேட்டர் பெயரை பதிவிட வேண்டும்.
லொகேஷனை சேர்க்க வேண்டும்.
“Android Oreo for Nokia 2 software license terms” விதிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
நிறைவுற்றதும் Request OTA பட்டனை க்ளிக் செய்யவும்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ OTA அப்டேட் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்திருக்கிறது. 
Tags:    

Similar News