தொழில்நுட்பம்

ஒரு கோடி யூனிட்கள் விற்பனை ஹானர் ஸ்மார்ட்போன்

Published On 2019-03-01 07:15 GMT   |   Update On 2019-03-01 07:15 GMT
ஹானர் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #Honor8X



ஹானர் பிராண்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹானர் 8X ஸ்மார்ட்போன் அக்டோபர் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஹானர் 8X ஸ்மார்ட்போன் ஒரு கோடி யூனிட்கள் விற்பனை எனும் மைல்கல் கடந்திருப்பது பெருமையாக இருக்கிறது. எங்களது ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க பலரது இதயங்களை வென்று வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ரீதியில் ஹானர் 8X முற்றிலும் புதுவித முயற்சியை பிரதிபலிக்கிறது. ஹானர் X சீரிஸ் மூலம் பயனர்களுக்கு சமீபத்திய பிரீமியம் அம்சங்களை வழங்குவோம் என ஹானர் நிறுவன தலைவர் ஜார்ஜ் ஷௌ தெரிவித்தார்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் டூயல் கேமரா யூனிட், 20 எம்.பி. + 2 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 



ஹானர் 8X சிறப்பம்சங்கள்:

- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
- மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி
Tags:    

Similar News