தொழில்நுட்பம்

ஒரு கோடி பேர் வாங்கிய ஸ்மார்ட்போன் - விற்பனையை மேலும் அதிகரிக்க விலை குறைப்பு

Published On 2019-01-08 06:20 GMT   |   Update On 2019-01-08 06:20 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் வாங்கியிருப்பதை கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #RedmiNote5Pro #High5



சியோமி நிறுவனம் தனது Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்த நிலையில், தற்சமயம் அந்நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதை கொண்டாடும் வகையில் ரெட்மி நோட் 5 ப்ரோ விலை குறைக்கப்படுவதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை குறைப்பின் படி 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.12,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இரு வேரியண்ட்களும் முறையே ரூ.1,000 மற்றும் ரூ.2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமியின் Mi வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகி இருக்கிறது. 

ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிபராகன் 636 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவுடன் ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
- 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
- கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
Tags:    

Similar News