தொழில்நுட்பம்

ரூ.8,000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

Published On 2019-01-03 11:34 IST   |   Update On 2019-01-03 11:34:00 IST
விவோ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகியுள்ளது. #Vivo #Offer

 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனாக விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இருந்தது.

புதுவித கைரேகை சென்சார் தவிர அதிகளவு ஃபிளாக்‌ஷிப் சிறப்பம்சங்கள் நிறைந்த விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.47,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



முந்தைய விலையில் இருந்து ரூ.8000 குறைக்கப்பட்டு விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலையில் அமேசான் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் வர்த்தகர்களிடம் நெக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 

விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8 
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News