தொழில்நுட்பம்

தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா புதிய சலுகை

Published On 2018-12-25 05:29 GMT   |   Update On 2018-12-25 05:29 GMT
ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea #offer



வோடபோன் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் மாற்றம் செய்யப்பட்டு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனம் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்து, வோடபோன் வழங்கும் அதே சலுகைகளை வழங்கியது.

இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனம் ரூ.392 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.189 விலையில் ஐடியா சலுகையை அறிவித்தது.

வோடபோன் போன்றே ஐடியா சலுகையிலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் கட்டுப்பாடுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.



ரூ.392 சலுகையில் ஐடியா பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 84 ஜி.பி. டேட்டா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்ற கட்டுப்பாடுடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வோடபோனை போன்றே ஐடியா நிறுவனம் தனது ரூ.399 சலுகையை மாற்றியமைத்தது. இதில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் ரூ.399 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News