தொழில்நுட்பம்

மிட்-ரேன்ஜ் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-11-21 09:28 GMT   |   Update On 2018-11-21 09:28 GMT
ஹூவாயின் ஹானர் பிரான்டு ஹானர் 10 லைட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #Honor10Lite



ஹூவாயின் ஹானர் பிரான்டு ஹானர் 10 லைட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடலில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

இத்துடன் கிரின் 710 சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆன்ட்ராய்டு 9 பை, EMUI 9.0, புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சங்கள், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபிக்கள், கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,370) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News