தொழில்நுட்பம்

ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2018-11-09 05:27 GMT   |   Update On 2018-11-09 05:27 GMT
குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்ட ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஃபாசில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. #Fossil #smartwatch



ஃபாசில் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் மற்றும் கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

இத்துடன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், புதிய பேட்டரி சேவிங் மோட், மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மோட், இன்டகிரேட் செய்யப்பட்ட இதயதுடிப்பு சென்சார், என்.எஃப்.சி., மற்றும் ஜி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் 41 மற்றும் 43 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

350 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் ரேபிட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி சேவிங் மோட் இரண்டு நாட்கள் டெல்லிங் டைம் வழங்ங்குகிறது. கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருப்பதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் ஃபிட் சேவைகளை பயன்படுத்த முடியும்.



இதய துடிப்பு சென்சார், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய செயலிகள் ஆட்டோ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பாடிஃபை மற்றும் நூன்லைட் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

18 எம்.எம். மற்றும் 22 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் பிரேஸ்லெட்களில் மாற்றக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட சாதனங்களில் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும். வயர்லெஸ் சின்கிங் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் வசதிகளை சப்போர்ட் செய்கிறது.

ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை 225 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.18,440 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News