தொழில்நுட்பம்

ரூ.175 விலையில் தமிழ் மொழியுடன் வட்டார மொழி சேனல்களை வழங்கும் அரசு கேபிள் டி.வி.

Published On 2018-10-13 09:18 GMT   |   Update On 2018-10-13 09:18 GMT
தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் தமிழ் மொழியுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட சேனல்களை கண்டுகளிக்க மாத சந்தா 175 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #TamilNadu



தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பினை ரூ.125 (வரிகள் தனி)க்கு மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் பேக்கினை ரூ.175-க்கும், 407 சேனல்களைக் கொண்ட ஹெச்.டி. பேக்கினை ரூ.225க்கும் வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் வாடிக்கையாளர்கள் தேவையினை கருத்தில் கொண்டு அவர்களது தாய்மொழியில் ஒளிபரப்பப்படும் டி.வி. சேனல்களை கண்டு களித்திட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 3 தனித்தனி சேனல் பேக்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தெலுங்கு சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் கன்னட சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் மலையாள சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் ரூ.175 (வரிகள் தனி) என்ற மாத சந்தா கட்டணத்தில் வழங்கப்படும்.

இந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி. ஆபரேட்டர்களுக்கு ரூ.100-ம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.75-ம் பங்கீடு செய்யப்படும்.
Tags:    

Similar News