தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-09-14 10:02 GMT   |   Update On 2018-09-14 10:02 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus #earphones



ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்ஸ் இன்-இயர் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இயர்போன்கள் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லெட்ஸ் வி12 இயர்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் மட்டும் கிடையாது என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

புதிய இயர்போன்களில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் மிகத்துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கேபிள் உள்ளிட்டவை அரமிட் ஃபைபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் டைப்-சி புல்லெட்கள் இழுக்கப்படும் போது அதிக உறுதியாக இருக்கும்.

சர்கஸ் லாஜிக் உடன் இணைந்து டி.ஏ.சி. கொண்டிருப்பதால் அதிக டைனமிக் ரேன்ஜ், சக்திவாய்ந்த பேஸ், சிகனல்-டு-நாய்ஸ் ரேஷியோ உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. டைப்-சி புல்லெட்கள் அனைத்து டைப்-சி போர்ட்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஒன்பிளஸ் தவிர மற்ற மாடல்களுடனும் பயன்படுத்தலாம்.

ஒன்பிளஸ் டைப்-சி புல்லெட்கள் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படுகிறது. இதன் விலை ரூ.1,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி மாடலில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
Tags:    

Similar News