தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் தான், ஆனாலும் கையில் மாட்டிக் கொள்ளலாம்..

Published On 2018-09-01 09:47 GMT   |   Update On 2018-09-01 09:47 GMT
இசட்.டி.இ. நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் டீஸ் செய்துள்ளது. #smartphone

 

இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகை ஆகும். புதிய சாதனம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED தொடுதிரை, முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.



இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான எல்இடி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.

அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

புதிய அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


Tags:    

Similar News