தொழில்நுட்பம்

விவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி

Published On 2018-08-21 07:01 GMT   |   Update On 2018-08-21 07:01 GMT
விவோ நிறுவனத்தின் புதிய வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vivo


விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு டீசர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ வி9 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாகி இருக்கும் வி11 ப்ரோ புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகமாகிறது.



விவோ வெளியிட்டிருக்கும் புதிய டீசரின் படி ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச், ஃபுல் வியூ மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதனுடன் டீசர் படத்தில் #UnlockTheAmazing ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 661 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்கள், 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.



சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் பாடி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. முன்னதாக விவோ X23 ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் பின்புறம் 3D அரோரா ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #UnlockTheAmazing
Tags:    

Similar News