தொழில்நுட்பம்

இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Published On 2018-08-02 10:06 GMT   |   Update On 2018-08-02 10:06 GMT
ஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #BlackberryEvolveX


ஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக, 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் DTEK ஆப் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

அழகிய செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், எவால்வ் X ஸ்மார்ட்போனில் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சாஃப்ட் டச் பேக் பேனல், கிரேடு 7 அலுமினியம் ஃபிரேம், கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- எவால்வ் - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- எவால்வ் X – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- எவால்வ் - 4 ஜிபி ரேம்
- எவால்வ் X - 6 ஜிபி ரேம்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- எவால்வ் - 13 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்,சாம்சங் S5K3L8 சென்சார்
- எவால்வ் X – 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, சாம்சங் S5K2L8 சென்சார்
- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் 

பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990 மற்றும் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. பிளாக்பெரி எவால்வ் X ஆகஸ்டு மாத இறுதியிலும், எவால்வ் செப்டம்பர் மாதத்திலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.3,950 கேஷ்பேக் மற்றும் மாத தவணை முறைகளில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #BlackberryEvolveX #Smartphone
Tags:    

Similar News