தொழில்நுட்பம்
கோப்பு படம்

மேம்படுத்தப்பட்ட 2018 ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்

Published On 2018-07-31 08:15 GMT   |   Update On 2018-07-31 08:15 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro


ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, ஹெட்போன் ஜாக் இல்லாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் 10.5 இன்ச் டிஸ்ப்ளே, அளவுகளில் 247.5மில்லிமீட்டர் உயரம், 178.7மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட சிறியதாகும். 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை பொருத்த வரை 280மில்லிமீட்டர் உயரம், 215மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6.4 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய வடிவமைப்புகளின் படி ஐபேட் மெல்லிய பெசல்களுடன் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் ஹோம் பட்டன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சாதனத்தில் ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படலாம். இதேபோன்று புதிய ஐபேட் மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படாது என கூறப்படுகிறது.



ஐபோன்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு பெரிய பேட்டரி, டாப்டிக் இன்ஜின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதேபோன்று ஐபேட் மாடலில் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்க இடவசதியில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் டைமன்ட் கட் முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று புதிய ஐபேட் மாடல்களில் ஸ்மார்ட் கனெக்டர் பக்கவாட்டில் இருந்து லைட்னிங் போர்ட் அருகே கீ்ழ்பக்கமாக மாற்றப்படுகிறது. இதனால் சற்றே செங்குத்தான கீபோர்டு இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் ஃபேஸ் ஐடி அம்சம் தான் என்றும், இது செங்குத்தான நிலையில் மட்டுமே வேலை செய்யும், எனினும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி கிடைமட்டமாக வேலை செய்யும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அம்சம் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #ipadpro #Apple
Tags:    

Similar News