தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஸ்மார்ட்போன் விற்பனையின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Published On 2018-05-06 11:05 IST   |   Update On 2018-05-06 11:05:00 IST
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2018 முதல் காலாண்டு விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. இதில் ஐபோன் X விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2018 முதல் காலாண்டில் ஐபோன் X அதிகம் விற்பனையாகியுள்ளது. ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின் படி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன. 

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் 5 இடங்களில் இடம்பிடித்த ஒற்றை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சியோமியின் ரெட்மி 5ஏ இருக்கிறது. நான்காவது இடத்தில் ஐபோன் 7 இருக்கிறது.



புகைப்படம்: நன்றி Strategy Analytics
2018 முதல் காலாண்டில் சுமார் 16 லட்சம் யூனிட் விற்பனையான ஐபோன் X மட்டும் 5% பங்குகளை பெற்றிருப்பதாக ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் 1.25 கோடி ஐபோன் 8 யூனிட்களை விற்பனை செய்து ஒட்டுமொத்த சந்தையின் 3.6% பங்குகளை பெற்றிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மாடல் சுமார் 83 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சந்தையில் 2.4% பங்குகளை பெற்றிருக்கிறது. ஐபோன் 7 சுமார் 56 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது.

இண்டாவது காலாண்டு துவங்கியிருக்கும் நிலையில், ஐபோன் X தொடர்ந்து உலகின் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. அதிசிறந்த வடிவமைப்பு, கேமரா, புதுவித செயலிகள் மற்றும் பரவலாக விற்பனைக்கு கிடைப்பது உள்ளிட்டவை இந்த மாடலுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது என ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் நிறுவன மூத்த ஆய்வாளர் ஜூஹா வின்டர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் X சர்வதேச விற்பனை நவம்பர் 2017-இல் துவங்கிய நிலையில், இதுவரை சுமார் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் 5 இடத்தை பிடித்த ஒற்றை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் சியோமி ரெட்மி 5ஏ சுமார் 54 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 
 

கோப்பு படம்: சியோமி ரெட்மி 5ஏ

சீனாவில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அறிமுக சலுகையாக முதல் 50 லட்சம் யூனிட்களுக்கு பேஸ் வேரியன்ட் விலை ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த அறிமுக சலுகை மார்ச் மாதத்துடன் நிறைவுற்றது.

ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சர்வதேச சந்தையில் விற்பனையான டாப் 7 ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பிடித்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சுமார் 53 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

Similar News