தொழில்நுட்பம்
கோப்பு படம்

அந்த மாதிரி ஆப் டெவலப்பர்களை கண்டுபிடித்தால் ஊக்கத்தொகை வழங்கும் ஃபேஸ்புக்

Published On 2018-04-11 08:40 GMT   |   Update On 2018-04-11 08:40 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் ஆப் டெவலப்பர்களை கண்டறிவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

ஃபேஸ்புக் நிறுவனம் டேட்டா அப்யூஸ் பவுன்டி (Data Abuse Bounty) எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ஆப் டெவலப்பர்கள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் மூலம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே செயல்படுத்தி வரும் பக் பவுன்டி திட்டம் போன்றே புதிய திட்டமும் செயல்படுகிறது. பக் பவுன்டி திட்டத்தில் பாதுகாப்பு பிழைகள் சரி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரித்து, அவற்றை மற்றவர்களுக்கு வழங்கும் அல்லது விற்பனை செய்யப்படுவதற்கான ஆதாரங்களை சேகரிப்போருக்கு ஃபேஸ்புக்கின் புதிய திட்டம் ஊக்கத்தொகை வழங்குகிறது. மற்ற பக் பவுன்டி திட்டங்களை போன்று இல்லாமல், புதிய திட்டம் ஒவ்வொரு அறிக்கையின் தாக்கத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும். 


கோப்பு படம்

அதிகபட்ச தாக்கம் கொண்ட அறிக்கைக்கு அதிகபட்சம் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.26,06,200) வரை ஊக்கத்தொகையாக வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. பயனர்கள் வழங்கும் அறிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து அதன் தன்மையை கண்டறிந்து அதன் தகவல்களை வழங்கும்.

தகவல் திருட்டு உறுதி செய்யப்பட்டதும், குறிப்பிட்ட ஆப் டெவலப்பர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தகவல் திருட்டில் பாதிக்கப்பட்டோருக்கு ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும்.

இந்த திட்டத்தில் பங்கேற்க குறிப்பிட்ட செயலியை ஃபேஸ்புக்கில் மட்டும் 10,000-க்கும் அதிகமானோர் பயன்படுத்த வேண்டும், நிச்சயம் தவறான தகவல் வைத்திருக்க வேண்டும், குறிப்பாக இவற்றை ஃபேஸ்புக் ஆய்வு செய்யாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News