தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்

Published On 2018-03-22 09:06 GMT   |   Update On 2018-03-22 09:06 GMT
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் ஃபேஸ்புக் பயனர் தரவுகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தரவுகளை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது. 

இது தொடர்பாக வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஃபேஸ்புக்கை அழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது ட்விட்டரில் #DeleteFacebook என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. சமீபத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் அனைவரையும் ஃபேஸ்புக் கணக்கை அழிக்கும் அளவு வீரியமானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் ஃபேஸ்புக் கணக்கை அழிக்க விரும்பாத ஃபேஸ்புக் பயனர்கள் கணக்கை பாதுகாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. சமீபத்திய பிழைக்கு ஃபேஸ்புக்-ஐ மன்னிக்க நினைப்பவர்கள், இதற்கு முக்கிய காரணம் மூன்றாம் தரப்பு செயலிகள் தான் என நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.



ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை செயலிகள் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கின்றனர். கேண்டி கிரஷ் முதல் இன்று நம்மில் பலரும் அதிகம் பயன்படுத்தும் பிரபல செயலிகள் அனைத்தும் அடங்கும்.

இந்த பிழையில் இருந்து தப்பிக்க செயலிகளை ஃபேஸ்புக் கணக்கில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய ஃபேஸ்புக் வலைத்தளம் அல்லது செயலி உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். 

- ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும் 

- ஃபேஸ்புக் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

- இனி ஆப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து, அவற்றில் அழிக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும்

- அடுத்து X ஐகானை கிளிக் செய்ய வேண்டும்

- கிளிக் செய்ததும் டேட்டாவை அழிக்க கோரும் தகவல்கள் பாப்-அப் போன்று திரையில் தோன்றும். அதில் இடம்பெற்றிருக்கும் Remove பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செயலிகளை எடுப்பதால் மட்டுமே தரவுகளை எடுத்து விட முடியாது. செயலிகளை அழித்தாலும் டேட்டாபேஸ்-இல் தகவல்கள் இருக்கும். இதனை தடுக்க டெவலப்பரை தொடர்பு கொள்ள வேண்டும். இதனை செயலியில் மேற்கொள்ள முடியாது என்பதால் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டும் செய்ய முடியும்.
Tags:    

Similar News