தொழில்நுட்பம்

மலிவு விலையில் Mi இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-03-20 09:46 GMT   |   Update On 2018-03-20 09:46 GMT
சியோமி நிறுவனத்தின் இரண்டு புதிய இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை அனைவருக்கும் ஏற்ற வகையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. Mi இயர்போன்கள் மற்றும் Mi இயர்போன் பேசிக் என அழைக்கப்படும் இரண்டு இயர்போன்கள் தவிர பல்வேறு இதர இயர்போன் மாடல்களை சியோமி ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. 

முன்னதாக Mi நாய்ஸ் கேன்சலிங் யு.எஸ்.பி. டைப்-சி இயர்போன்களை சியோமி அறிமுகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து Mi இன்-இயர் ஹெட்போன்களின் பேசிக் மாடல் ரூ.100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது.



சியோமி Mi இயர்போன் சிறப்பம்சங்கள்:

டைமண்டு கட்டிங், சிடி என்கிரேவிங் போன்ற 20 கட்ட வழிமுறைகளால் மெட்டல் சேம்பர் உருவாக்கப்பட்டு இருப்பதால் தலைசிறந்த பேஸ் அனுபவம் வழங்குகிறது. இத்துடன் ரிசோனேட்டிங் பேஸ் வழங்க ஏரோ-ஸ்பேஸ் கிரேடு மெட்டல் டையகிராம் வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பேலன்ஸ்டு சிஸ்டம் சவுண்டு மற்றும் காற்றோட்டத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. வால்யூம் கண்ட்ரோல் மற்றும் அழைப்புகளை ஏற்க மிக எளிமையாக இருக்கிறது. இதற்கென வயர் ரிமோட் ஒன்று MEMS மைக்ரோபோனுடன் வழங்கப்பட்டுள்ளது.

கெவ்லர் ஃபைபர் கேபிள் புதிய இயர்போன்களை மிகவும் உறுதியாகவும், எவ்வித பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 14 கிராம் எடை கொண்டிருக்கும் Mi இயர்போன், (XS/S/L) என மூன்று வித பட் அளவுகளில் கிடைக்கிறது. 



சியோமி Mi இயர்பபோன் பேசிக் சிறப்பம்சங்கள்:

அலுமினியம் சவுண்டு சேம்பர் இயர்போனில் தரமான ஆடியோ அனுபவம் வழங்குவதோடு, ஸ்கிராட்ச் மற்றும் ஸ்லிப் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பேலன்ஸ்டு சிஸ்டம் சவுண்டு மற்றும் காற்றோட்டத்தை வழங்குவதோடு தலைசிறந்த ஸ்டீரியோ எஃபெக்ட் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேர பயன்பாடுகளிலும் காதுகளில் வலி ஏற்படுத்தாத படி இயர்போன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டி-ஸ்லிப் வடிவமைப்பு, அடிக்கடி கீழே விழாமல் பார்த்துக் கொள்ளாது. ஆக்ஸ் ஜாக் 45 கோணத்தில் வளைக்கப்பட்டிருப்பதால் நீண்ட காலம் பாதிக்கப்படாமல் இருக்கும். இத்துடன் மைக்ரோபோனில் உள்ள ஒற்றை பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பிளே, பாஸ் மற்றும் அழைப்புகளை ஹேங்-அப் செய்ய முடியும்.

சியோமி Mi இயர்போன்கள் கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi இயர்போன் பேசிக் மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய இயர்போன்களும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாங்க முடியும்.
Tags:    

Similar News