தொழில்நுட்பம்

ட்விட்டரில் பரவும் தகவல்கள் 'பூராவும்' போலி தானாம்

Published On 2018-03-09 11:52 GMT   |   Update On 2018-03-09 11:52 GMT
சமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளில் 70% போலியானவை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

ட்விட்டரில் உண்மையான செய்திகளை விட போலி செய்திகளே ட்விட்டரில் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் மீடியா லேப் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2006 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமார் முப்பது லட்சம் பேர் பகிர்ந்து கொண்ட 1,26,000 செய்திகளை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 70 சதவிகிதம் போலி செய்திகள் என்பதை கண்டறிந்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளின் ஆதிக்கத்தை தெரிந்து கொள்ளும் முயற்சியாக நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை அறிவியில் நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை தடுக்க ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் மிகச்சிறிய நடவடிக்கைகளை அமெரிக்க சட்ட வல்லுநர்கள் குழு மற்றும் சர்வதேச அமைப்பினர் கண்கானித்து வருகின்றனர். 



ஆய்வில் உட்படுத்தப்பட்ட செய்திகளை ஆறு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரிவுகளிலும் உண்மை செய்திகளை விட போலி செய்திகளை சமூக வலைத்தளவாசிகள் அதிகளவு பகிர்ந்து கொண்டுள்ளனர். 
இவற்றில் பெரும்பாலான செய்திகள் தீவிரவாதம், இயற்கை பேரழிவு மற்றும் வணிகம் சார்ந்த செய்திகள் இடம்பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2012 மற்றும் 2016 அமெரிக்க தேர்தல்களின் போது போலி செய்திகள் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆட்டோமேட்டெட் கணக்குகளில் இருந்து சமஅளவு உண்மை செய்திகளும், போலி செய்திகளும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போலி செய்திகளை பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணிகளாக சமூக வலைத்தளவாசிகள் இருந்துள்ளனர். 

தற்போதைய ஆய்வு ட்விட்டர் சார்ந்த தகவல்களை கொண்டது தான் என்றாலும், இது ஃபேஸ்புக் போன்ற இதர சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News