தொழில்நுட்பம்

ஏர்செல் நெட்வொர்க்கில் போர்ட் அவுட் கோடு பெறுவது எப்படி?

Published On 2018-03-01 10:45 GMT   |   Update On 2018-03-01 10:45 GMT
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
சென்னை:

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல், தனது நிறுவனத்தை திவலானதாக அறிவிக்கக் கோரி நேற்று விண்ணப்பித்து இருந்தது. 

முன்னதாக ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம், வாடிக்கையாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி ஏர்செல் சார்பில் அந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. 

இந்நிலையில், இன்று (மார்ச் 1) காலை முதல் பெரும்பாலான வட்டாரங்களில் ஏர்செல் சேவை சீராக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்செல் சேவைகளில் இருந்து மற்ற நெட்வொர்க்-களுக்கு போர்ட் அவுட் செய்ய முடியாமல் தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

அந்த வகையில் ஏர்செல் சேவையை பயன்படுத்தி (சிம் வைத்திருப்போர்) வருவோர் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற்றிக் கொள்ள போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

- மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகளில் இருந்து 9841012345 அல்லது 9842012345 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

- அடுத்து அழைப்பை தொடர்வதற்கான மொழி மற்றும் போர்ட் அவுட் செய்ய வேண்டிய ஆப்ஷன்களை உறுதி செய்ய வேண்டும்.

- இனி ஐ.வி.ஆர். மூலம் கேட்கப்படும் போது உங்களது மொபைல் நம்பர், மற்றும் சிம் கார்டு நம்பரின் கடைசி ஐந்து எண்களை ஒவ்வொன்றாக அதற்கான கால அவகாசத்துடன் பதிவு செய்ய வேண்டும். 

- மொபைல் நம்பர் மற்றும் சிம் கார்டு நம்பர் உள்ளிட்டவற்றை பதிவு செய்ததும், ஐ.வி.ஆர். குரலில் உங்களுக்கான போர்ட் அவுட் கோடு தெரிவிக்கப்படும். இதனை பயன்படுத்தி மற்ற நெட்வொர்க் சிம் கார்டு வாங்கிட முடியும். 



சிம் கார்டு நம்பரை கண்டறிவது எப்படி? 

சிம் கார்டு நம்பரை மொபைல் போனின் செட்டிங்ஸ் (Settings) -- அபௌட் போன் (About Phone) -- ஸ்டேட்டஸ் (Status) -- ஐ.எம்.இ.ஐ. இன்ஃபர்மேஷன் (IMEI Infromation) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பர் இடம்பெற்றிருக்கும்.

சில மொபைல் போன்களில் இந்த ஆப்ஷன்கள் மாற்றப்பட்டிருக்கலாம். எனினும் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. தகவல்கள் ஆப்ஷனில் சிம் கார்டு நம்பர் ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பரை தெரிந்து முடியும்.

குறிப்பு: சிம் கார்டு நம்பர் என்பது ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என அழைக்கப்படுகிறது. இந்த நம்பர் சிம் கார்டிலேயே அச்சடிக்கப்பட்டு இருக்கும். சிம் கார்டுகளில் கண்டறிய முடியாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கென கிடைக்கும் செயலிகளை பயன்படுத்தியும் சிம் கார்டு நம்பரை கண்டறிய முடியும்.
Tags:    

Similar News