தொழில்நுட்பம்

மொபைல் நம்பரில் நெட்வோர்க் போர்ட் செய்ய ஐந்து டிப்ஸ்

Published On 2018-02-24 07:39 GMT   |   Update On 2018-02-24 07:58 GMT
ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை மாற்றாமல், உங்களது நெட்வொர்க்கை போர்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் சேவை கட்டணங்கள் குறைந்து வரும் நிலையில், போட்டி நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன. ஜியோவை தொடர்ந்து போட்டி நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் சலுகைகளை அறிவித்தும் வருகின்றன. 

அந்த வகையில் பெரும்பாலானோர் தங்களது நெட்வொர்க்கில் இருந்து மாற விரும்புகின்றனர். பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் நெட்வொர்க் மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி அனைத்து நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அவ்வாறு பழைய நெட்வொர்க்கில் இருந்து புதிய நெட்வொர்க்-க்கு உங்களது நம்பரை போர்ட் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். 

- முதலில் உங்களது மொபைல் போனில் இருந்து PORT என டைப் செய்து <பத்து இலக்க மொபைல் நம்பர்> டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பியதும் நீங்கள் பயன்படுத்தி வரும் நெட்வொர்க் சார்பில் பிரத்யேக குறியீடு எண் அனுப்பப்படும். 

- இனி நீங்கள் மாற விரும்பும் நெட்வொர்க் விற்பனை மையத்திற்கு சென்று உங்களது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.



- புதிய நெட்வொர்க் மாறி, அதற்கான சிம் கார்டு பெற ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டும். 

- புதிய நெட்வொர்க் மையத்தில் உங்களது அடையாள சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படத்தை வழங்க வேண்டும்.

- புதிய சிம் கார்டு வழங்கப்பட்ட ஏழு நாட்களில் புதிய நெட்வொர்க் ஆக்டிவேட் செய்யப்படும். இனி புதிய நெட்வொர்க் சிம் கார்டினை மொபைல் போனில் செறுகி பயன்படுத்த துவங்கலாம்.
Tags:    

Similar News