தொழில்நுட்பம்

4ஜி வேகத்தில் இந்தியாவின் நிலை - முகேஷ் அம்பானிக்கு நன்றி

Published On 2018-02-21 05:55 GMT   |   Update On 2018-02-21 05:55 GMT
லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி உலகில் 4ஜி டேட்டா வேகம் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.
லண்டன்:

லண்டனை சேர்ந்த ஓபன் சிக்னல் ஆய்வு நிறுவனம் பிப்ரவரி 2018-இல் தி ஸ்டேட் ஆஃப் எல்டிஇ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் சிக்னல் மற்றும் வேகம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் உலகில் மிக குறைவான 4ஜி டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட மிக குறைவான வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நவம்பர் 2017-ஐ விட பிப்ரவரி 2018-இல் 4ஜி டேட்டா வேகம் குறைந்துள்ளது. இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் நொடிக்கு 6.07 எம்பி (6.07Mbps) வரை இருந்துள்ளது. இந்த பட்டியலில் சராசரியாக நொடிக்கு 44.31 எம்பி (44.31 Mpbs) வேகம் வழங்கி உலகில் அதிவேக டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்திருக்கிறது.



மிக குறைந்த டேட்டா வேகம் வழங்கிய நாடுகள் பட்டியலில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா நொடிக்கு 10 எம்.பி. வேகம் வழங்கியுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் அதிவேக டேட்டா வழங்கும் நிலையை கண்டறிய ஓபன்சிக்னல் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறது. எல்டிஇ சேவைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம், அதிநவீன மற்றும் புதிய 4ஜி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, நெட்வொர்க்கில் ஏற்படும் நெரிசல் உள்ளிட்டவற்றை பொருத்து கணக்கிடப்படுகிறது.

பொதுவாக அதிவேக டேட்டா வேகம் வழங்கும் நாடுகளில் அதிநவீன எல்டிஇ நெட்வொர்க், பெரியளவு எல்டிஇ வசதி கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது. 4ஜி சிக்னல்கள் சீராக கிடைப்பதை பொருத்த வரை நவம்பர் 17-இல் இருந்ததை விட இந்தியா 14 இடங்கள் கீழ் இறங்கியுள்ளது. 

எனினும் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு 86.26 சதவிகிதம் ஆக இருக்கிறது. 2016-இல் ஜியோ வரவுக்கு பின் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் இ.ஐ. சால்வடார் மற்றும் அல்ஜீரியா 4ஜி நெட்வொர்க் வழங்கும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளன.
Tags:    

Similar News