தொழில்நுட்பம்

சர்வதேச விழாவில் சோனி பங்கேற்பை உறுதி செய்த டீசர்

Published On 2018-02-20 09:32 GMT   |   Update On 2018-02-20 09:32 GMT
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2018-இல் சோனி மொபைல்ஸ் பங்கேற்க இருப்பதை புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி:

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழா விரைவில் துவங்க இருக்கிறது. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் பங்கேற்பதை சோனி மொபைல்ஸ் புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. 

23-நொடிகள் ஓடக்கூடிய டீசரில் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்: எக்ஸ்பீரியா XZ2, XZ2 காம்பேக்ட் சோனி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரம் அறியப்படாத நிலையில், பெயரிடப்படாத சோனி ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் லிஸ்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது. H8266 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 18:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோப்பு படம்: சோனி XZ பிரீமியம் 

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், IP65 அல்லது IP68 சான்று, 3210 அல்லது 3240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் நோவோ அடாப்டிவ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோன்று 6ஜிபி ரேம், 4K டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை சோனி இதுவரை உறுதி செய்யாத நிலையில் இவற்றின் உண்மை தன்மை அடுத்த வாரம் தெரியவரும். சோனி மட்டுமின்றி நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.
Tags:    

Similar News