அறிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டில் "View Once" அம்சம்!

Published On 2022-12-13 06:49 GMT   |   Update On 2022-12-13 06:49 GMT
  • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்கப்பட்ட அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
  • இதே அம்சம் விரைவில் ஐஒஎஸ் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியில் பயனர் குறுந்தகவல்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு "View Once" எனும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த வசதி கொண்டு அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்டதும் அவை அழிந்து விடும். வாட்ஸ்அப்-இன் "View Once" அம்சம் தற்போது குறுந்தகவல்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதால், இதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான "View Once" அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.25.20 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் பயனர்கள் மெசேஜ்களுக்கு "View Once" வசதியை பயன்படுத்தலாம்.

புது வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் சாட் பார் அருகில் விசேஷ பட்டனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது. பயனர்கள் "View Once" மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும். மெசேஜை அனுப்புவதற்கான ஐகான் மீது லாக் இடம்பெற்று இருக்கிறது.

வாட்ஸ்அப் தற்போது "View Once" முறையில் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுக்கும் வசதியை வழங்கி வருகிறது. இதே போன்று "View Once" போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர், ஃபார்வேர்டு, காப்பி அல்லது சேவ் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை. இதே போன்ற வசதிகள் மெசேஜ்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: WABetaInfo

Tags:    

Similar News