அறிந்து கொள்ளுங்கள்

இனி அதையும் கண்ட்ரோல் பண்ணலாம்.. வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் புது அம்சம்

Published On 2024-03-08 10:25 GMT   |   Update On 2024-03-08 10:25 GMT
  • ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
  • ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

 


இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News