அறிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப்-இல் புது அம்சம்.. இனிமே அந்த தொல்லை இல்லை..

Published On 2023-10-20 12:15 GMT   |   Update On 2023-10-20 12:15 GMT
  • பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்தலாம்.
  • தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும் என்று மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் வழங்கப்படும் போது, பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பயன்படுத்துவதற்கு தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட அக்கவுண்ட் ஸ்விட்சிங் அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.

 

தற்போதைய அறிவிப்பின் படி டூயல் சிம் கொண்ட போன்களில் பயனர்கள் இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும். இரண்டாவது அக்கவுண்டை பயன்படுத்துவதற்காக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை வாட்ஸ்அப் மற்றொரு சாதனம் அல்லது மாற்று சிம் கார்டில் அனுப்புகிறது.

இதனை பயன்படுத்தி அக்கவுண்ட்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, செயலி இரண்டு அக்கவுண்ட்களிலும் இயங்கும். முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே மொபைலில் இரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ஆட் அக்கவுண்ட் (Add Account) ஆப்ஷனை தொடர்ந்து பிரைவசி மற்றும் நோட்டிஃபிகேஷன் செட்டிங்களை இரண்டு அக்கவுண்ட்களுக்கும் தனித்தனியே செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News