அறிந்து கொள்ளுங்கள்

அடிக்கடி சொதப்பும் ஐபோன் 14 ப்ரோ கேமரா - பயனர்கள் குமுறல்

Published On 2022-09-19 08:07 GMT   |   Update On 2022-09-19 08:07 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
  • விற்பனை துவங்கியதும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள பிரச்சினை அம்பலமாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் ஐபோன் 14 ப்ரோ விற்பனை சமீபத்தில் துவங்கியது. புதிய ஐபோன் மாடலை வாங்கி இருப்பின் அதில் கேமரா பிரச்சினை இருப்பதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 124 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் தங்களது யூனிட்களில் கேமரா ஷேக் ஆவதாகவும், விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா பிரச்சினை இருப்பதாக பலர் தங்களின் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இயக்க முயன்றவர்களுக்கு பெரும்பாலும இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் கேமரா இயக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது.


ஸ்னாப்சாட் செயலியை பயன்படுத்திய போது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா வைப்ரேட் ஆகும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபோன் லென்ஸ் பகுதியில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இத்தனை இடையூறுகளுக்கு பின் புகைப்படம் மற்றும் வீடியோ தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மாடலில் கேமரா இயக்கிய போது இது போன்ற பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. தற்போதைய பிரச்சினை கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து இயக்கிய போது தான் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு செயலிகளின் மென்பொருள் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட செயலிகள் தரப்பில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு என பிரத்யேகமாக அப்டேட் வெளியிடுவது அவசியம் ஆகும். எனினும், ஐபோனில் அதிர்வுகள் மற்றும் கிரைண்டிங் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Tags:    

Similar News