புது ஐபேட் மாடல்களுக்காக ஸ்பெஷல் OLED உருவாக்கும் சாம்சங்!
- சாம்சங் நிறுவனம் ஸ்பெஷல் OLED பேனல்களை உருவாக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இவற்றில் சில பேனல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்களில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் ஸ்பெஷல் OLED பேனல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த OLED பேனல்கள் 2024 வாக்கில் அறிமுகமாகும் ஐபேட் மாடல்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறஉவனம் ஃபுல் கட் OLED பேனல்களை பயன்படுத்த திட்டமிட்டது. எனினும், ஐபேட்களுக்கு ஆப்பிள் எதிர்நோக்க இருக்கும் தட்டுப்பாடு காரணமாக சாம்சங் நிறுவனம் டு-ஸ்டாக் டேண்டம் OLED பேனல்களை உற்பத்தி செய்ய துவங்கி இருக்கிறது.
இதே பேனல்கள் ஆப்பிள் மேக் மாடல்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. டு-ஸ்டாக் டேண்டம் OLED பேனல்களில் இரண்டு அடுக்கு பிக்சல்கள் இடம்பெற்று இருக்கும். இதில் உள்ள ஹைப்ரிட் தொழில்நுட்பம் அதிக பிரைட்னஸ் வழங்குவதோடு தற்போது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி மற்றும் லேப்டாப் மாடல்களில் உள்ள OLED பேனல்களை விட அதிக காலம் உழைக்கும்.
பொதுவாகவே OLED பேனல்களின் வாழ்நாள் குறைவு தான். இவைகளில் பர்ன்-இன் பிரச்சினை ஏற்படுவது வாடிக்கையான ஒன்று ஆகும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவே ஆப்பிள் நிறுவனம் புதிய பேனல்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. ஆப்பிள் தற்போது பயன்படுத்த இருக்கும் டு-ஸ்டாக் OLED பேனல்கள் ஃபுல்-கட் OLED பேனல்களை விட மேம்பட்டவை இல்லை. வியாபார அடிப்படையில், அதிக தட்டுப்பாடு கொண்ட பேனல்களை உருவாக்கவே ஒவ்வொரு நிறுவனமும் முடிவு செய்யும். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ஃபுல்-கட் OLED ஸ்கிரீன்களின் உற்பத்தியை நிறுத்து விட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை ஆப்பிள் வாட்ச் வெளியானதில் இருந்தே சாம்சங் நிறுவனம், ஆப்பிளுக்கு OLED பேனல்களை வழங்கி வருகிறது. ஆப்பிள் வாட்ச் மாடல்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் சாம்சங் OLED பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட்களின் உற்பத்தியை இந்தியாவில் துவங்க திட்டமிட்டுள்ளது.