இந்தியாவில் ரிலான்ச் செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. சில நாடுகளில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S21 FE மாடலை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை டிப்ஸ்டரான தருன் வட்சா வெளியிட்டுள்ளார். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S21 FE மாடலை 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.
இதில் எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் அடுத்த மாதம் (ஜூலை) அறிமுகமாகும் என்று வட்சா தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி S21 FE விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிராசஸர் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.