அறிந்து கொள்ளுங்கள்

ஒப்போ, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்

Update: 2022-08-10 11:16 GMT
  • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
  • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

Tags:    

Similar News