அறிந்து கொள்ளுங்கள்

இனி போட்டோக்கள் வேற லெவலில் மாறிடும்.. புதிய AI அம்சம் அறிவித்த ஒன்பிளஸ்

Published On 2024-04-04 10:33 GMT   |   Update On 2024-04-04 10:33 GMT
  • புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
  • அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஐ. இரேசர் (AI Eraser) எனும் அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மேஜிக் இரேசர் என்றே இந்த அம்சம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.

முதற்கட்டமாக இந்த அம்சம் ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் ஓபன் மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இம்மாதமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான அப்டேட்கள் விரைவில் வழங்கப்படும்.


ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்தும் முன்

 

ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்திய பின்

 

புதிய ஏ.ஐ. இரேசர் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர மேம்பட்ட அல்காரிதம்களை பயன்படுத்துகிறது. இந்த அம்சம் போட்டோ கேலரியில் உள்ள தேவையற்ற பொருட்களை அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.

பயனர்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் அல்லது இடையூறுகளை குறிப்பிட்டதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவற்றை நீக்கி செயற்கையாக பேக்கிரவுண்டு ஒன்றை உருவாக்கும். இதற்காக உருவாக்கப்படும் பேக்கிரவுண்டு ஒட்டுமொத்த புகைப்படத்துடன் ஒற்று போகும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News