அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு சேவை - புளூ டிக் பெற கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Published On 2023-06-08 05:36 GMT   |   Update On 2023-06-08 05:36 GMT
  • மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
  • வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்படுகிறது.

சமூக வலைதள நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முன்னணி தளங்களை வைத்திருக்கிறது. டுவிட்டர் நிறுவனம் துவங்கி வைத்த கட்டண முறையிலான வெரிஃபைடு சேவையை தற்போது மெட்டாவும் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவையை பெற மொபைல் செயலிகளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான வெரிஃபைடு சேவை மாதம் ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது.

"மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது," என மெட்டா தெரிவித்துள்ளது.

"முதற்கட்டமாக பல்வேறு உலக நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மெட்டா வெரிஃபைடு சோதனையை இந்தியாவுக்கும் நீட்டிக்கிறோம். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு பேட்ஜ்களை தொடர்ந்து வழங்குவோம்," என்று மெட்டா மேலும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News