ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் எத்தனை ஜிபி ரேம் உள்ளது தெரியுமா?
- ஆப்பிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் தான் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 09) மாலை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் தான் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 09) மாலை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் சீரிசின் அனைத்து மாடல்களிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இவற்றில் எத்தகைய மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
ஐபோன்களில் வழங்கப்படும் ரேம் வகை மற்றும் திறன் பற்றி ஆப்பிள் எப்போதும் விளம்பரப்படுத்துவதில்லை. புது ஐபோன்கள் வெளியீட்டுக்கு முன் வெளியான தகவல்களில், ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் 6 ஜிபி LPDDR5 ரேம், ஐபோன் 14 மாடல்களில் 6 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நான்கு ஐபோன் 13 மாடல்களிலும் LPDDR4X ரேம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், புது ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் ரேம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. புது ஐபோன்களின் டியர்-டவுன் வீடியோ வெளியாகும் போது அதில் இருக்கும் அனைத்து பாகங்கள் (ரேம் திறன் உள்பட) தெரியவவரும். அந்த வகையில் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் LPDDR5 ரேம் வழங்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.