அறிந்து கொள்ளுங்கள்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸருடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி S23 FE?

Published On 2023-02-22 07:35 GMT   |   Update On 2023-02-22 07:35 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • புதிய கேலக்ஸி S23 FE மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S21 FE மாடல் எதிர்பார்த்த வரவேற்பை சந்தையில் பெறவில்லை. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தொடர்ந்து கேலக்ஸி FE ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி S23 FE மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருக்கும் OreXDA புதிய கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் விலையை குறைவாக நிர்ணயிக்க சாம்சங் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவு சற்றே பின்னடைவாக தெரிந்தாலும், இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் ஃபிளாக்ஷிப் அனுபவத்தை வழங்கும்.

 

பழைய பிராசஸர்களை பயன்படுத்தும் போது, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மாடலின் விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இது ஸ்மார்ட்போனின் விற்பனையை கணிசமாக அதிகப்படுத்தும். இதுதவிர புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 120Hz AMOLED ஸ்கிரீன், கேலக்ஸி S23 சீரிசில் உள்ள கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.

சாம்சங்-இன் FE சீரிஸ் சந்தையில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனினும், குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் பிராசஸருடன் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி S23 FE மாடல் இந்த ஆண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் பல்வேறு போட்டி நிறுவனங்களின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S23 FE எது மாதிரியான வரவேற்பை பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News