கூகுள் குரோமுக்கு ஆப்பு - அட்லஸ் வெப் பிரவுசரை களமிறக்கிய ChatGPT
- தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் பயன்படுத்தலாம்
- விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ் வெப் பிரவுசர் களம் இறங்கியுள்ளது.
தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில், விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் குரோமைப் போலவே இதுவும் Chromium based பிரவுசர் என்பதால், கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.