அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆர்எஸ்ஆர் அப்டேட் வெளியீடு!

Published On 2023-05-02 03:56 GMT   |   Update On 2023-05-02 03:56 GMT
  • பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.
  • ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.

ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுவிடும். ஆர்எஸ்ஆர் அப்டேட்டை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்த பின் உங்களது ஐபோன் அல்லது ஐபேட்-இன் அபௌட் பகுதியில் ஐஒஎஸ் 16.4.1 (a) அல்லது ஐபேட் ஒஎஸ் 16.4.1 (a) என்று காண்பிக்கப்படும்.

 

ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாகவே உங்களின் சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும். இதுபோன்ற அப்டேட்கள் அனைத்திற்கும் சாதனம் ரிஸ்டார்ட் ஆகாது. ஆனாலும் சில சாதனங்கள் ரிஸ்டார்ட் ஆகலாம். அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டதும், ரிஸ்டார்ட் செய்யக் கோரும் ஆப்ஷன் திரையில் தோன்றும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாக இன்ஸ்டால் ஆவதை தடுப்பதற்கான வசதி செட்டிங்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படாத ஒன்றாகும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் மூலம் மிகமுக்கிய செக்யுரிட்டி மேம்படுத்தல்கள் வழங்கப்படும். இதுபோன்ற அப்டேட் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அல்லது செக்யுரிட்டி சார்ந்த பிரச்சினைகளை விரைந்து சரிசெய்யும் நோக்கில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சாதனத்தின் பாதுகாப்பு கருதி இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதே சிறந்தது.

இன்றைய ஆர்எஸ்ஆர் அப்டேட் சில நிமிடங்களில் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகிவிடும். இந்த அப்டேட் இன்ஸ்டால் செய்தபின் சாதனம் ரிஸ்டார்ட் ஆகும். சமீபத்திய ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் கொண்ட சாதனங்களில் மட்டுமே ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்படும்.

Photo Courtesy: 9To5Mac

Tags:    

Similar News