அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

Published On 2022-09-09 14:32 IST   |   Update On 2022-09-09 14:32:00 IST
  • ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
  • புது ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் இன்று (செப்டம்பர் 9) மாலை துவங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. புது ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இன்று (செப்டம்பர் 9) மாலை துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 14 மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய உற்பத்தி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் 14 மாடல்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே இதே தகவலை கணிக்கும் வகையில் ஆய்வு அறிக்கை வெளியாகி இருந்தது.


ஐபோன் 14 சீரிஸ் சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் நடைபெற இருக்கிறது. இதே ஆலையில் தான் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2022 நான்காவது காலாண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சத்து 70 ஆயிரம் ஐபோன்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் 3 லட்சத்து 70 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது.

2022 முழுக்க ஆப்பிள் நிறுவனம் 11 முதல் 12 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரன் மற்றும் பெகட்ரான் என மூன்று உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. உலகளவில் ஆப்பிள் ஐபோன் வினியோகத்தில் 5 முதல் 7 சதவீத யூனிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இவை உள்நாட்டு தேவையில் 85 சதவீதத்தை பூர்த்தி செய்யும்.

Tags:    

Similar News