அறிந்து கொள்ளுங்கள்

ஐபோனில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் - ஆப்பிள் Patent-இல் வெளியான தகவல்!

Published On 2023-01-03 08:08 GMT   |   Update On 2023-01-03 08:08 GMT
  • ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • ஐபோன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீண்ட காலம் எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது.

ஐபோன்களை கொண்டு பல்வேறு இதர சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் அம்சத்திற்காக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் பைமாடல் மாக்னடிக் அலைன்மெண்ட் பாகங்களை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி இந்த அம்சம் எதிர்கால ஐபோன்களில் ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும். தற்போது ஐபோன்களின் பின்புறம் ஆப்பிள் வழங்கி வரும் வயர்லெஸ் சார்ஜிங் பெரிய காயில் கொண்டுள்ளது. ஆனால் இது வாட்ச்-ஐ சார்ஜ் செய்யாது.

காப்புரிமை விண்ணப்ப குறிப்பில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்கள் எலெக்ட்ரோமேக்னடிக் இண்டக்ஷன் முறையில் மின்சாதனங்களுக்கு சார்ஜ்-ஐ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு வயர்லெஸ் சார்ஜர் பகுதியில் இதர சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தவிர ஆப்பிள் நிறுவனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய OLED கொண்ட ஐபேட் ப்ரோ 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து அவற்றில் M2 சிப்செட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: Patentlyapple 

Tags:    

Similar News