தொழில்நுட்பம்
மால்வேர் - கோப்புப்படம்

1.5 கோடி ஸ்மார்ட்போன்களை பதம்பார்த்த ஏஜன்ட் ஸ்மித்

Published On 2019-07-11 11:26 GMT   |   Update On 2019-07-11 11:26 GMT
இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மால்வேர் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.



ஏஜன்ட் ஸ்மித் எனும் மொபைல் மால்வேர் சர்வதேச அளவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை பாதித்து இருக்கிறது. இதில் 1.5 ஸ்மார்ட்போன்கள் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை நீக்கிவிட்டு, தீங்கிழைக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்யும்.

செக் பாயிண்ட் எனும் ஆய்வு மையம் புதிய மால்வேர் பற்றிய தகவலை வழங்கியது. கூகுள் சார்ந்த செயலியாக வெளிப்படும் இந்த மால்வேர் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் ஆனதும், பயனருக்கு தெரியாமலேயே தீங்கு விளைவிக்கும் செயலிகளை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும்.



இந்த மால்வேர் இந்தி, அரபிக், ரஷ்ய மற்றும் இந்தோனேசிய மொழி பேசும் பயனர்களை அதிகளவு பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மால்வேர் மூலம் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவை தவிர லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மால்வேர் பயனர் ஸ்மார்ட்போன்களில் நிதி ஆதாயம் காட்டும் போலி விளம்பரங்களை காண்பித்து அவர்களை சிக்க வைத்திருக்கிறது. மேலும் இதனை மிக எளிமையாக தீங்கு விளைவிக்கும் காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்.
Tags:    

Similar News