தொழில்நுட்பம்
ஜெப்ரானிக்ஸ் ஹோம் ஆட்டோமேஷன் கேமரா

வீட்டு பாதுகாப்பிற்கு புதிய சாதனத்தை அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

Published On 2020-03-10 13:02 GMT   |   Update On 2020-03-10 13:02 GMT
வீட்டு பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் வகையில் புதிய சாதனத்தை ஜெப்ரானிக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் வீட்டு பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் புதிய ஹோம் ஆட்டோமேஷன் கேமராவினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வைஃபை, பான், சுழற்வசதி, டிஜிட்டல் ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலி இணைக்கப்பட்ட நுண்ணுனர் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

குழந்தைகள் மற்றும் முதியவர்களின்  பாதுகாப்பிற்கு ஹோம் ஆட்டோமேஷன் கேமரா ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது, பயனர்கள் அலுவலகம் அல்லது ஏதேனும் விடுமுறையில் எங்கே இருந்தாலும், அவர்களது வீட்டில் நடப்பவற்றை  உடனுக்குடன் கண்காணிக்க முடியும். 

ஹோம் ஆட்டோமேஷன் கேமரா விவரங்களை ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்களாக பெறலாம். மேலும் வீட்டில் உள்ள நபர்களுடன், கேமரா வழியாகத் தொடர்புக்கொள்ளவும் இயலும். பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் MIPC செயலியை பதிவிறக்கம் செய்துக் கொண்டு ஹோம் ஆட்டோமேஷன் கேமராவை எளிதாகப் பொருத்திக், கட்டமைக்கலாம். 



மேலும் கேமரா கோணங்களை மாற்றுதல், அலாரம் அமைப்பை இயக்குதல், நகர்வைப் பதிவு செய்தல் மேலும் புதிய வசதிகளுடன் இந்தச் செயலி கிடைக்கிறது. இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமராவில், மோஷன் டிடக்‌ஷன் என்னும் தனித்துவமான சிறப்பு அம்சம் உள்ளது. இதன்படி  கேமரா ஏதேனும் ஒரு அசைவை உணருமானால், உடனடியாக அலாரம் எழுப்பி, மொபைலுக்கு ஒரு செய்தியை அனுப்பும். இதனால் உடனடியாக வீட்டை கண்காணிக்க இயலும்.

இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமரா 350 டிகிரி சுழலும் வசதி மட்டும் இல்லாமல், விருப்பமானவர்களுடன் நேரடியாகத் தொடர்புக் கொள்ளும் இருவழித் தொடர்பு வசதியும் இதில் உள்ளது. வீட்டில் உள்ள முதியவர்களையோ குழந்தைகளையோ கண்காணிக்கிறீர்கள் எனில், இந்தக் கேமராவில், உட்பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக் உதவியுடன், கண்காணிப்பு மட்டுமின்றி அவர்களைத்தொடர்புக் கொள்ளவும் இயலும்.

இந்தக் கேமரா LAN/WIFI/Hotspot இணைய இணைப்பு வசதி மற்றும் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள்/தரவுகளை 512 ஜி.பி. சேமிப்பு வசதி வரை சேமிக்கும்படியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட் செய்யும் வசதியும் கொண்டது. இந்தக் கேமராவை சுவரில் பொருத்தலாம் அல்லது மேசைமீது வைத்தும் உபயோகப்படுத்தலாம்.
Tags:    

Similar News