தொழில்நுட்பம்
ஸ்மார்ட் கடிகாரம்

லெனோவாவின் ஸ்மார்ட் டிஸ்பிளேவுடன் கூடிய கடிகாரம்

Published On 2019-09-07 07:30 GMT   |   Update On 2019-09-07 07:30 GMT
சர்வதேச அளவில் பிரபலமான லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் டிஸ்பிளேவுடன் கூடிய கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் உதவியுடன் செயல்படும் வகையிலான இந்த கடிகாரம் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.5,999. ஸ்மார்ட் டிஸ்பிளே கடிகாரம் விலை ரூ.14,999. லெனோவா இணையதளம், பிளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகங்களில் இது கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட் கடிகாரம் 4 அங்குல தொடுதிரையைக் கொண்டது. அத்துடன் இதில் பில்ட் இன் அம்சமாக கூகுள் அசிஸ்டென்ட் உள்ளது. இது மென்மையான துணி போர்வை மேலுறையாக இருப்பதால் இதை படுக்கையறையில் வைத்துக்கொள்ள ஏதுவாக உள்ளது. உபயோகிப்பாளர்கள் கூகுள் அசிஸ்டென்ட் மூலமாக இந்த கடிகாரம் வாயிலாக தங்களது தூக்க நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்.

இதில் கூகுள் அசிஸ்டென்ட் இணைப்பு வசதி உள்ளதால் உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் உபகரணங்களை குறிப்பாக விளக்கை அணைப்பதற்கு இந்த ஸ்மார்ட் கடிகாரம் மூலம் உத்தரவிடலாம். அத்துடன் காலண்டரில் உள்ள நிகழ்ச்சிகளை இதில் பார்க்கலாம். நேரம், அலாரம், அடுத்து உங்களுக்கு உள்ள முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சி, வானிலை விவரம் உள்ளிட்ட பல தகவல்களுடன் இனிய இசையையும் இது வெளிப்படுத்தும்.

இதில் 6 வாட் ஸ்பீக்கர் இருப்பதால் இசை வெள்ளம் அறை முழுவதும் ரம்மியமாக வெளிப்படும். ரேடியோ, போட்காஸ்ட், ஆடியோபுக் மூலமான இசை ஆல்பங் களையும் கேட்க முடியும். இந்த ஸ்மார்ட் கடிகாரம் மூலம் டி.வி.யில் இணைக்கப்பட்டுள்ள குரோம் காஸ்டை குரல் வழி மூலம் கட்டுப்படுத்தலாம். நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்களை டி.வி.யில் பார்த்து ரசிக்கவும் இந்த ஸ்மார்ட் கடிகாரம் உதவும்.

இது 10 அங்குல தொடு திரையைக் கொண்டது. இதன் மூலம் ஸ்மார்ட்டாக சில பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ரெசிப்பிக்களை தெரிந்து கொள்வது, கூகுள் தேடலில் பதில் கிடைப்பது, யூ-டியூப் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்பீக்கர் மூலம் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளையும் கட்டுப்படுத்தலாம். வீடியோ அழைப்புகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். அதற்கு வசதியாக இதில் கேமரா உள்ளது. கூகுள் போட்டோ அக்கவுன்ட்டில் இருந்து புகைப்படங்களையும் எடுக்க முடியும்.
Tags:    

Similar News