மொபைல்ஸ்

வேற லெவல் அம்சங்களுடன் புது கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ்

Published On 2025-06-03 15:00 IST   |   Update On 2025-06-03 15:00:00 IST
  • புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
  • ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .

இன்ஃபினிக்ஸ் நிறுவனம், தனது GT சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் GT 20 Pro-வை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K 144Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 12GB வரை ரேம் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 அல்டிமேட் 5G பிராசஸர் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6-அடுக்கு VC கூலிங் வசதியைக் கொண்டுள்ளது. இது அதன் முந்தைய மாடலை விட 13% பெரிய VC பகுதியைக் கொண்டுள்ளது. இது கிராஃப்டனால் சான்றளிக்கப்பட்ட 120FPS BGMI கேமிங் வசதி கொண்டிருக்கிறது. இது கேமிங் கண்ட்ரோல், எளிதான கேமரா செயல்பாடு மற்றும் விரைவான மீடியா பிளேபேக் வசதியை வழங்குகிறது.

புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த XOS 15 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதில் ஃப்ளோட்டிங் வின்டோ, டைனமிக் பார், கேம் மோட், கிட்ஸ் மோட், பீக் ப்ரூஃப் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள ஃபோலாக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வானிலை அப்டேட், கேமரா கண்ட்ரோல் மற்றும் சாட் வசதிகளை வழங்குகிறது.

இந்த நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா 2.0 டிசைன், பத்து விதங்களில் எல்இடி லைட்டிங் வசதி கொண்ட டார்க் ஃப்ளேர் நிற ஆப்ஷன் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை எல்இடி-க்களைக் கொண்ட பிளேட் ஒயிட் நிறத்திலும் வருகிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 45W வேகமான சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி உள்ளது.

இன்ஃபினிக்ஸ் GT 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 GB + 256 GB மாடலின் விலை ரூ. 24,999 மற்றும் 12 GB + 256 GB மாடலின் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .

ஸ்மார்ட்போனுடன் கிட் வாங்குபவர்களுக்கு, ப்ரோ மேக்னடிக் கூலிங் ஃபேன் மற்றும் GT கேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக GT கேமிங் கிட் ரூ.1,199 சலுகை விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2000 தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ. 2000 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Tags:    

Similar News