8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 அப்டேட்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நத்திங் ஸ்மார்ட்போன்
- இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 27ஆம் தேதி நத்திங் போன் (3a) லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் டெம்பர்டு கிளாஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள், கிளிஃப் லைட், 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் டூயல் 5G உடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 3000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது போன் (3a)-ஐ போன்றது. இது சிஎம்எஃப் போன் 2 ப்ரோ மாடலை போன்றே மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸரால் இயக்கப்படுகிறது.
இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நத்திங் நிறுவனம் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். மற்ற மாடல்களை போன்றே, இந்த ஸ்மார்ட்போனும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.