கணினி
null

அனுப்பிய மெசேஞ்ச்களையும் எடிட் செய்யலாம் - ஐபோன் வாட்ஸ்அப்-இல் விரைவில் புதிய வசதி!

Published On 2023-03-28 09:41 GMT   |   Update On 2023-03-28 09:45 GMT
  • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
  • ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

 

தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.

புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

Tags:    

Similar News