கணினி

ஆண்ட்ராய்டில் டுவிட்டர் புளூ சந்தா - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-01-20 05:11 GMT   |   Update On 2023-01-20 05:11 GMT
  • டுவிட்டர் சமூக வலைதளத்தில் டுவிட்டர் புளூ சந்தா ஏராள மாற்றங்களை பெற்று இருக்கிறது.
  • தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு டுவிட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டுவிட்டர் புளூ சந்தா ஒருவழியாக ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்திர சந்தா கட்டண முறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆண்ட்ராய்டு தளத்திற்கும் டுவிட்டர் புளூ சந்தா வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் போன்றே டுவிட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் மாதம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ வெப் தளத்திற்கான கட்டணத்தை விட செயலியின் கட்டணம் அதிகம் ஆகும்.

இரு தளங்களின் விலை வேறுபாட்டிற்கான காரணம் பற்றி டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இன்-ஆப் பர்சேஸ்களுக்கான பிளே ஸ்டோர் கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் டுவிட்டர் புளூ கட்டணத்தில் வேறுபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது.

பலன்களை பொருத்தவரை டுவிட்டர் புளூ பயனர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்துடன் டுவிட்களை எடிட் செய்யும் வசதி, 60 நிமிடங்களுக்கான வீடியோ அப்லோட் ( வெப்-இல் மட்டும்) செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கஸ்டம் ஆப் ஐகான், புக்மார்க் செய்யப்பட்ட டுவிட்களுக்கு எளிய நேவிகேஷன், செயலியில் வித்தியாசமான தீம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

செயலியில் நேவிகேஷன் பார் கஸ்டமைஸ் செய்யும் வசதி, ரீடர் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை டுவிட்டர் ஒட்டுமொத்த அனுபவத்தை வித்தியாசமாக மாற்றுகிறது. டுவிட்டர் புளூ சந்தா தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News