கணினி

100 மணி நேர பிளேபேக் வழங்கும் நாய்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-08-23 10:44 IST   |   Update On 2022-08-23 10:44:00 IST
  • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.

நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ப்ளூடூத் மூலம் இயங்கும் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் ஆகும். நாய்ஸ்பிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

புதிய நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்கள் ரியல்மி, ஒன்பிளஸ், போட் மற்றும் இதர பிராண்டு இயர்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஏதுவாக காந்தம் வழங்கப்பட்டு உள்ளது.


இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது, நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்களில் 10 மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.

முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100+ அதிக மணி நேர பிளேபேக் வழங்கும். இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News