கணினி

வாட்ச் 8 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் செய்த அதிரடி மாற்றம் - என்ன தெரியுமா?

Published On 2022-07-26 08:11 GMT   |   Update On 2022-07-26 08:11 GMT
  • ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • அந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.


இந்நிலையில், தற்போது இதன் டிஸ்ப்ளே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச்களை விட இந்த ஸ்மார்வாட்சில் தான் பெரிய அளவு டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ச் 7 சீரிஸை விட வாட்ச் 8 சீரிஸில் உள்ள டிஸ்ப்ளே 7 சதவீதம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News